×

சேதமடைந்து விட்டதால் ஊரணி படித்துறையை புதிதாக கட் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

திருவாடானை,செப்.23: திருவாடானை அருகே தொண்டி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சின்னக்கீரமங்கலம் பால்பண்ணை எதிரேயுள்ள ஊரணியில், படித்துறை கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் இந்த ஊரணி தூர்வாரி மராமத்து செய்யப்பட்டு ஆழப்படுத்தப்பட்டது. அதன் காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் இப்பகுதியில் பெய்த கனமழையால் இந்த ஊரணி நிரம்பியது. இந்நிலையில் சின்னக்கீரமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான திருவள்ளுவர் நகர், கல்லூர், பாரதிநகர், இளமணி,மாங்குடி, வத்தாப்பெட்டி, பெருஞ்சையூர், பறையனேந்தல், சேந்தனி உட்பட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினசரி இந்த படித்துறையை பயன்படுத்தி ஊரணியில் குளிக்கவும்,அழுக்கு துணிகளை துவைக்கவும் வந்து செல்கின்றனர். ஆனால் படித்துறை படிகள் முழுவதும் சேதமடைந்து இரண்டு பக்கவாட்டிலும் உள்ள தடுப்பு சுவர்களில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதால், இங்கு குளிக்க வரும் முதியவர்களும்,சிறுவர்களும் ஒருவித அச்சத்துடன் வந்து செல்கின்றனர். தற்போது இந்த ஊரணியில் தண்ணீர் குறைந்து விட்டதால் பருவமழை துவங்குவதற்குள் படித்துறையை இடித்து அகற்றி விட்டு புதிய படித்துறை கட்டித்தந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென அப்பகுதி பொதுமக்களும்,சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமூக ஆர்வலர் நாகரெத்தினம் கூறுகையில்: கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஊரணி தூர்வாரி ஆழப்படுத்தப்பட்ட நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக இப்பகுதியில் பெய்த கனமழையால் ஊரணியில் மழைநீர் நிரம்பியது. சுற்றுவட்டாரத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆண்கள்,பெண்கள் ஏராளமானோர் அழுக்கு துணிகளை துவைத்தும், குளித்து விட்டும் செல்கின்றனர். ஊரணியில் படித்துறை முழுவதும் சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதால், இங்கு குளிக்க வரும் முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் ஒருவித அச்சத்துடன் வந்து செல்கின்றனர். தற்சமயம் ஊரணியில் தண்ணீர் குறைந்து விட்டதால் படித்துறையை இடித்து அகற்றி விட்டு புதிய படித்துறை கட்ட வேண்டும் என கூறினார்.

Tags :
× RELATED காட்பாடியில் 3 மாதங்களாக சிறுமியை...